தெலங்கானாவில் அரசு கொடுத்த புல்லட் ப்ரூப் கார் அடிக்கடி பழுதானதால், பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு சென்றார்.
புல்லட் ரூப் கார் அடிக்கடி ரிப்பேர் ஆவதாகவும், சில நேரங்களில் நடுரோட்டில் நின்று விடுவதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
அதனால், வேறு கார் கொடுக்க வேண்டும் என ஒராண்டாக எம்எல்ஏ வலியுறுத்தியிருந்த நிலையில், அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால், சட்டப்பேரவைக்கு இருசக்கர வாகனத்தில் அவர் வந்தார்.
இதைப்பார்த்த போலீசார், அவரிடம் விசாரித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்திற்கு செல்ல அனுமதித்தனர்.