"ஏப்ரல் 12-ஆம் தேதி ஆஜராக வேண்டும்" - பாட்னா மாவட்ட நீதிமன்றம் சம்மன் | rahulgandhi | congress

Update: 2023-04-01 13:49 GMT

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஏப்ரல் 12-ஆம் தேதி ஆஜராக பாட்னா மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கரோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேசிய ராகுல்காந்தி, அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி சுஷீல் குமார் மோடி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பட்னா மாவட்ட நீதிமன்றம், வழக்கு தொடர்பான வாக்குமூலத்தை ஏப்ரல் 12-ஆம் தேதி பதிவு செய்ய, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்