"120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள்.." நாகர்கோவில் காசி ஜாமின் மனு... சி​பிசிஐடி கடும் எதிர்ப்பு

Update: 2023-02-16 03:55 GMT
  • இளம் பெண்களிடம், ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்த நாகர்கோவில் காசி ஜாமீன் கோரிய வழக்கில் சி​பிசிஐடி தரப்பில் ஜாமீன் வழங்க கூடாது என, நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • நாகர்கோவில் காசி ஜாமின் கோரிய மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
  • அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் நிலை அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்,
  • 120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள் மற்றும் ஆயிரத்து 900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
  • மேலும், இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், இன்னும் சில இளம் பெண்களிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது என நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் காசிக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
  • இதனையடுத்து நீதிபதி, இறுதி உத்தரவிற்காக வழக்கை ஒத்தி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்