கொட்டி தீர்த்த கோடை மழை.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. கதறும் மக்கள்
திருப்பூரில் பெய்த கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ராயபுரம், கருவம்பாளையம் , பிச்சம்பாளையம்,
குமார் நகர், ராக்கியாபாளையம் வீரபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மும்மூர்த்தி நகர் , ஜெயலட்சுமி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் எப்போது மழை
பெய்தாலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும் இதை தடுக்க மாநகராட்சி
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.