10 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பெண் குழந்தை... நீர்த்தொட்டியில் விழுந்து பரிதாப பலி... கதறி அழுத பெற்றோர்...
- மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை விட ஓய்வூதியதார்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பணியாளர் மற்றும் ஓய்வூதிய துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
- மத்திய அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 60 லட்சமாக உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 77 லட்சமாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
- இவர்களில் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் பேர், நூறு வயதிற்கும் அதிகமானவர்கள் என்றும், அவர்கள் பணியாற்றிய போது பெற்ற சம்பளத்தை விட அதிக அளவு ஓய்வூதியம் பெறுவதாக தெரிவித்தார்.
- ஓய்வூதியம் பெறுபவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் 90 முதல் 100 வயதுக்குட்பட்டவர்கள் என்றார்.
- விவகாரத்து பெற்ற மகள்களும் குடும்ப ஓய்வூதியம் பெற வகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.