"தொடரும் அலட்சியம்"... மருத்துவர் இன்றி பிரசவம் பார்த்த செவிலியர்கள் - இறந்தே பிறந்த பெண் குழந்தை

Update: 2022-12-31 03:26 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஸ்ரீநிதி என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவர் பணிக்கு வராத நிலையில், அங்கிருந்த 2 செவிலியர்கள் பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை, இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து போனதாக கூறி, உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்