திருச்சியில் பரபரப்பு...குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட பயங்கரம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே, குடும்ப பிரச்சினையில், முன் விரோதம் காரணமாக, இளைஞரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து பழிக்குப்பழி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-12-25 10:38 GMT

கடந்த 2020 ஆம் ஆண்டு, ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் கிளிக்கூடு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், குடும்பப் பிரச்சினையில், தனது உறவினரான அறிவழகன் என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, பிரகாஷ் மற்றும் அறிவழகன் குடும்பத்தினருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் பிரகாஷ் வீடு திரும்பியுள்ளார். அப்போது, கொலையுண்ட அறிவழகனின் உறவினரான அசோக் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து, பிரகாஷை அரிவாளால் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்