திருப்பதி தேவஸ்தானத்திற்கு RBI அபராதம் விதித்த விவகாரம்! - மத்திய அரசு வெளியிட்ட புது தகவல்

Update: 2023-03-30 02:34 GMT
  • வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெரும் நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில், பதிவு செய்து மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும்.
  • கடந்த 2019ம் ஆண்டு முதல், திருப்பதி தேவஸ்தானத்தின் எஃப்.சி.ஆர்.ஏ உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.
  • எனினும் பக்தர்கள் மூலம் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக வந்த நிலையில், உரிமத்தை புதுப்பிக்காததால் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத நிலை தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டது.
  • இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, தேவஸ்தானத்திற்கு ரிசர்வ் வங்கி பத்து கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
  • பின்னர் அபராதத் தொகை 3 கோடிய 29 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
  • இத்தகைய சூழலில், தேவஸ்தானம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளால், 2025ம் ஆண்டு வரை எஃப்.சி.ஆர் ஏ உரிமத்தை மத்திய அரசு புதுப்பித்து உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்