"என்னை கொன்றுவிடு" விளையாட்டாக சொன்ன நண்பர் - நிஜமாகவே கொன்று வீசிய நபர்..!
தூத்துக்குடியில், மதுபோதையில் தன்னைக் கொன்றுவிடுமாறு கூறியதற்காக, நண்பனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி சின்ன கண்ணுபுரம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் பின்பகுதியில், தனது நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து விட்டதாக, போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பதும், இறந்தவர் பாண்டி என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், போதையில் பாண்டி தன்னைக் கொன்றுவிடுமாறு கூற, அவரது தலையில் மாரிமுத்து கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார், கைது செய்தனர்.