தனிமையில் அடிக்கடி.. 7 மாத கர்ப்பம்.. காதலன் வீட்டிலேயே தூக்கு மாட்டிய காதலி - கல்யாண வீடு துக்க வீடாக மாறிய சோகம்

Update: 2023-02-09 05:53 GMT

திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியை சேர்ந்த நரேஷ் குமார் என்ற இளைஞரும், கமலாபுரம் நத்தம் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததன் விளைவாக, சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இருவரின் திருமணத்திற்கும், மகன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கிராம பஞ்சாயத்தார் உத்தரவுப்படி, நரேஷ்குமாரின் வீட்டில் சுஷ்மிதா கடந்த ஒன்றரை மாதங்களாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்னும் 3 நாட்களில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சுஷ்மிதா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்