குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்த மனைவி...விரக்தியில் கணவன் செய்த காரியம் - திருவாரூரில் அதிர்ச்சி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில், கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தைக்கு மனைவி தாய்ப்பால் கொடுக்காமல், பவுடர் பால் கொடுத்ததால் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கணவன் சுரேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.