வயிற்று வலியால் துடித்த சிறுமி..பரிசோதனையில் வந்த அதிர்ச்சி உண்மை -வீட்டு ஓனர் குடும்பம் செய்த பகீர்

Update: 2022-10-29 08:28 GMT

வயிற்று வலியால் துடித்த சிறுமி..பரிசோதனையில் வந்த அதிர்ச்சி உண்மை - வீட்டு ஓனர் குடும்பம் செய்த பகீர் செயல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வருகிறார். இவரின் 16 வயது மகளை, குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வெங்கடேசனின் அக்கா லலிதா, அவரின் சில நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டும் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இந்நிலையில், வயிற்று வலியால் துடித்த சிறுமியை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில், கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வெங்கடேசன், அவருடைய சகோதரி லலிதா, தாய் விஜயா மற்றும் லலிதாவின் நண்பராண வெங்கப்பாவை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள கிரி மற்றும் பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்