திருப்பதியில் நடந்த அதிசயம்.. கொட்டும் மழையில் துடித்து கொண்டே வந்த இதயம்.. மறுபிறவி எடுத்த சிறுமி
- திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையில் ஐந்தரை வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
- குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய, திருப்பதி தேவஸ்தானத்தில் பத்மாவதி குழந்தைகள் இதய நல மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது
- . அங்கு, இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது இதய மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
- ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் மூளை சாவு அடைந்த மாணவனின் இதயம் தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
- அதை, கடந்த மூன்று ஆண்டுகளாக இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த திருப்பதி மாவட்டம் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.