திடீரென கடலில் இருந்து வந்த வினோதம்! பதறி போன நீராடிய பக்தர்கள் - திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு

Update: 2023-04-12 06:46 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு டன் அளவிலான கடற்பாசிகளால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித நீராடி முருகப்பெருமானை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்வாங்கிய கடல், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், இன்று திடீரென கடலின் ஆழமான பகுதியில் இருக்கும் கடற்பாசிகள் ஒரு டண் ஆளவிற்கு கரை ஒதுங்கி இருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடற்பாசிகள் கரை ஒதுங்கிய இடத்தில் துர்நாற்றம் வீசுவதோடு புனித நீராடும் பக்தர்களுக்கு உடலில் அரிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக கோயில் நிர்வாகம் கரை ஒதுங்கிய கடற்பாசிகளை அப்புறப்படுத்திட வேண்டும் என பக்தர்களும் உள்ளூர் வாசிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்