திருட முயன்றவரை கட்டி வைத்து அடித்ததில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

Update: 2022-12-04 05:14 GMT

திருச்சி அருகே மரம் அறுவை செய்யும் தொழிற்சாலையில் திருட முயன்ற நபர் ஒருவரை அசாம் மாநில தொழிலாளர்கள் கட்டி வைத்து தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரம் அறுவை செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவின் போது தொழிற்சாலைக்குள் குதித்த மர்மநபர் ஒருவர் தொழிலாளர்களின் பணத்தை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது சிக்கிய அந்த அடையாளம் தெரியாத நபரை அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்து அந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட அசாம் மாநில தொழிலாளர்கள் 4 பேரிடமும், தொழிற்சாலை உரிமையாளரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்