திருட சென்ற வீட்டில் KGF டயலாக் கூறி காலில் விழுந்து கதறிய கொள்ளையன் - சாவியை எடுத்து கொடுத்த ஓனர்

Update: 2023-05-26 01:42 GMT

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் - ரேகா தம்பதியின் மகள் சோனா. தம்பதி இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, முகமூடி அணிந்தபடி உள்ளே நுழைந்த இரு இளைஞர்கள், சோனாவின் கழுத்தில் கத்தியை வைத்து நகை கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த இளம்பெண், பீரோ சாவியை எடுத்துக் கொடுக்கவே, பீரோவில் இருந்த 16 புள்ளி 5 சவரன் நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் 9 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை மர்நபர்கள் பறித்துள்ளனர். இதில், எதிர்பாராத விதமாக, திடீரென அந்த இளம்பெண்ணின் காலில் விழுந்த கொள்ளையன், தன்னை மன்னித்து விடுமாறும், தனது தாய்க்காக இந்த நகைகளை கொள்ளையடித்துச் செல்வதாகவும் என கேஜிஎஃப் பட பாணியில் டயலாக் விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, நகைகளுடன் தப்பியோடிய மர்மநபர்களை புகாரின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்