"பிரசவ வார்டில் ஆண்கள் இருக்கக் கூடாது"... வெளியே போக சொன்ன காவலாளியை கொடூரமாக தாக்கிய இளைஞர்

Update: 2023-05-26 11:06 GMT

சிதம்பரம் தில்லை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சத்யேந்திரன் என்பவரின் மனைவிக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்க்க சத்யேந்திரன் சென்றபோது, தலைமை மருத்துவர் பார்வையிடும் நேரம் என்பதால், பெண்கள் பிரசவ வார்டில் இருந்த ஆண்களை காவலாளி செல்வம் வெளியேற்றினார். அப்போது சத்யேந்திரனுக்கும் காவலாளி செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, செல்வத்தை சத்யேந்திரன் கடுமையாகத் தாக்கியதாக தெரிகிறது. இதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவலாளி செல்வம், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். அவரிடம் பணியில் இருந்த செவிலியர்களும், ஊழியர்களும் மருத்துவமனையில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர். இதையடுத்து, சத்தியேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்