SI திட்டியதை தட்டி கேட்ட இளைஞர்.. அடுத்த நொடியே உடைந்த மூக்கு? - புதுக்கோட்டையில் பயங்கரம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே, இளைஞரின் மூக்கை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. செல்வகுமார் என்பவர், எம்ஜிஆர் நகரில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் என்பவர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அதனை தட்டிக்கேட்ட செல்வகுமாரை, கோவிந்தராஜ் தாக்கியதில், அவருக்கு மூக்கில் ரத்தம் கொட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, எஸ்ஐ கோவிந்தராஜ் விரட்டியதாக கூறப்படுகிறது.