கார் டிரைவருடன் கனெக்ட்டான மனைவி..இளைஞரை கண்டம் செய்த ரியல் கணவன்..ஆவடி அருகே நடந்த கொடூரம்
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சத்யா என்பவருடன் திருமணமான நிலையில், தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து தனியே வாழ்ந்து வந்த விஜயலட்சுமிக்கு ஆவடியை சேர்ந்த கார் ஓட்டுநர் சுரேஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியை போல வசித்து வந்துள்ளனர். இதனிடையே, அடிக்கடி விஜயலட்சுமியிடம் தகராறு செய்து வந்த சத்யா, விஜயலட்சுமியை தன்னுடன் வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளார். இது குறித்து போலீசில் புகாரளித்த விஜயலட்சுமி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்நிலையில், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது தாய்மாமன் சிவராமன் வீட்டிற்கு சென்ற சத்யா, தன்னுடைய நிலையை உறவினர்களிடம் எடுத்து கூறி மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் சரவணனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, சத்யாவின் உறவினரான சரவணன், கூலிப்படைகள் மூலம் சுரேஷ்குமாரை வீடு புகுந்து வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், விஜயலட்சுமியின் கணவர் சத்யா மற்றும் அவரது தாய்மாமா சிவராமனை கைது செய்த நிலையில், மற்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.