"முதல் குழந்தை பெற்ற போதும் கிடைக்காத சந்தோசம்" பிரேமலதா செயலால் நெகிழ்ந்த பழங்குடியினர்

Update: 2023-05-04 02:37 GMT

யாத்திசை திரைப்படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான விருது வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் யாத்திசை திரைப்படத்தை பழங்குடியின மக்களுடன் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கண்டு களித்தார். நரிக்குறவர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தேமுதிக சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் யாத்திசை திரைப்படம் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்கள், வாகனம் மூலம் திரையரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், யாத்திசை படக்குழுவினர் மற்றும் தேமுதிக நிர்வாகிகளும் திரைப்படத்தை பார்த்தனர். படத்தின் இடைவேளையின் போது அனைத்து பழங்குடியின மக்களுக்கும் பாப்கான் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, யாத்திசை திரைப்படத்தை பழங்குடியினத்தவர்களுடன் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்