விளையாடிய கொண்டிருந்த சிறுமி காருக்குள் பிணமாக கிடந்த சோகம் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-04-28 01:35 GMT

பாப்பாக்குடி அருகே பள்ளாக்கால் பொதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த கனகா என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து, 7 வயது மகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பீடிக்கடையில், வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கனகா, தனது குழந்தை மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் காரின் உள்ளே, சிறுமி மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சந்தேகத்திற்கிடமான காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில், காரின் லாக் பழுதானதால், வெளியே வர முடியாமலும், அதிக வெப்பத்தாலும், சிறுமி மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்