"நா சிவனேன்னுதானே இருந்தேன்.. என்னை ஏன் வம்புக்கு இழுக்குற".. யானையிடம் வித்தை காட்டிய சுற்றுலா பயணி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்
தற்போது கோடை காலம் என்பதால் தர்மபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதி சாலையில் அடிக்கடி யானை நடமாட்டம் உள்ளது. போதிய விழிப்புணர்வு செய்யப்படாத காரணத்தால், சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு யானை இடம் சில்மிஷம் செய்வதும், கற்களை எடுத்து வீசுவதும், செல்ஃபி புகைப்படம் எடுப்பதும் செய்து வருகின்றனர்
தொடர்ந்து இந்த ஆபத்தான பணிகளை சுற்றுலா பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்