பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் போதே உயிரை விட்ட ஆசிரியர்...- காஞ்சிபுரத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்
காஞ்சிபுரம் பகுதியில் பணி செய்து கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகுண்டபுரத்தில், செயல்பட்டு வரும், அரசு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தொழிற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த சக்திவேல், மாணவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.