டெல்லியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், அரசு தயார் நிலையில் உள்ளதாக கூறிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பிறரை குறை கூறுவதற்கான நேரமில்லை என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களில் 153 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில், கனமழை குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், யமுனா நதியின் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை என்பதால், வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்தார். இருந்தபோதும், அனைத்து எம்.எல்.ஏ-க்கள், மேயர்களும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.