உள்ளிருப்பு போராட்டம் உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்; திடீரென மயங்கி விழுந்த ஊழியர்
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் 30 பேரை பணிநீக்கம் செய்ததை கண்டித்து, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை உண்ணாவிரத போராட்டமாக மாற்றி ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது நாள் போராட்டத்தின்போது, மாயவேல் என்ற ஊழியர் உடலநலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாயவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.