மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை தெப்பக்குளத்தில், விழுந்த மழை துளிகளின் அற்புதமான காட்சி இணையத்தில் வலம் வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. அப்போது, மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரை தெப்பக்குளத்தில் மழை நீர் சரசரவென விழுந்த காட்சி காட்சி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.