ரீமதி விழுந்ததாக கூறப்படும் இடத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள் - கோரிக்கை விடுத்த மாணவர்களின் பெற்றோர்
கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் உருக்குலைந்த சக்தி மெட்ரிக் பள்ளியில் 68 நாட்களுக்கு பிறகு சீரமைப்பு பணிகள் துவங்கியிருக்கிறது.
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஜூலை 17ஆம் தேதி வன்முறையும் வெடித்தது...
இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பள்ளியை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில் 68 நாட்களுக்கு பிறகு சக்தி மெட்ரிக் பள்ளியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன.
100க்கும் மேற்பட்டோரை கொண்டு டிராக்டர், கிரேன் இயந்திரம் மூலமாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
ரீமதி விழுந்ததாக கூறப்படும் இடம் உள்ளிட்ட இடங்களிலும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதேநேரம் பள்ளியில் நேரடி வகுப்புகளை விரைவாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.