கண்ணூரில் பற்றி எரிந்த பயணிகள் ரயில்.. சிக்கிய முக்கிய ஆதாரம்... - கேரளாவில் பரபரப்பு..!

Update: 2023-06-01 11:09 GMT

கேரள மாநிலம் கண்ணூரில் ஆலப்புழா விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்துக்குள்ளான நிலையில், அது குறித்த விவரங்களை தேசிய புலனாய்வு முகமை கேட்டுள்ளது.

கண்ணூர் ரயில்நிலையம் 3வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கவனித்த ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு துறை உதவியுடன் நெருப்பை கட்டுப்படுத்தி, சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சீல் வைத்தனர். தகவல் கிடைத்து அங்கு வந்த தடயவியல் நிபுணர் குழுவினர், தடயங்களை சேகரித்து வருகின்றனர். உளவுத்துறை கூடுதல் எஸ்பி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் பெட்டியின் கழிப்பறை ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே கல் கிடந்ததால், யாரேனும் தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனிடையே, ஆலப்புழா விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான விவரங்களை தருமாறு கேரள காவல்துறையினர் என்ஐஏ கேட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்