ரூ.90லட்சத்தை அபேஸ் செய்து விட்டு ஓட்டம் பிடித்த நிதி நிறுவன உரிமையாளர்-பிளான் போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2023-07-20 10:54 GMT

புதுச்சேரி, குயவர்பாளையம் - லெனின் வீதியில் கூட்டுறவு கடன் சங்கம் பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அங்கு, பொதுமக்கள் பலர் வைப்பு நிதி, வாராந்திர சேமிப்பு நிதி பெயரில் தங்களின் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களின் முதலீடு பணம் ரூபாய் 90 லட்சத்தை நிறுவனத்தினர் மோசடி செய்து தலைமறைவான நிலையில், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதில், தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர், சேலம், மானினாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கப்பழம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை சிறையில் அடைத்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள நிறுவன ஊழியர்கள் பிரேமாவதி, ஜெயவள்ளி ஆகிய இரு பெண்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்