120 அடி கிணற்றில் விழுந்த முதியவர்.. 3 நாளுக்கு பின் கடவுளாக வந்த நபர்

Update: 2023-05-13 03:05 GMT


புதுச்சேரியில் முதியவர் ஒருவர் 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நிலையில், 3 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடலூரை சேர்ந்த பாவாடை என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரி மடுகரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வயலுக்கு சென்ற போது, அங்கிருந்த 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பாவாடை 3 நாட்களாய் கூச்சலிட்டு மயங்கிய நிலையில், அவ்வழியே சென்ற ஒருவர் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி முதியவர் பாவடையை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்