நாமக்கலில் ஓனர் முன்னே பேக்டரியை சல்லி சல்லியாக நொறுக்கிய அதிகாரிகள்

Update: 2023-06-09 02:12 GMT

குமாரபாளையத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த சாய ஆலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அம்மன் நகர், பூலக்காடு, தண்ணீர் பந்தல் காடு, கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சாய ஆலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அனுமதியின்றி இயங்கி வந்த சாய ஆலைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த சிறுகுறு சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரிய ஆலைகளில் இருந்து சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் சாய ஆலைகளை இடிப்பதை நிறுத்திவிட்டு அதிகாரிகள் வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்