"அமெரிக்கா தரும் எலும்பை கடித்துக் கொண்டு ஓடும் காட்டு நாய்" - வட கொரிய அதிபரின் தங்கை ஆவேசம்

Update: 2022-11-25 10:29 GMT

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஆண்டுதோறும் கூட்டு பயிற்சி நடத்துவது வடகொரியாவிற்கு ஆத்திரமூட்டியுள்ளது. இதனால் வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து வடகொரியா மீது தென்கொரியா பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்தும் நிலையில், அதை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அமெரிக்கா கொடுத்த எலும்பைக் கடித்துக் கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென்கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்க போகிறது? என்று கிண்டல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்