மகுடம் சூடினார் பழங்குடியினர்களின் புதிய மன்னர்... சந்தோஷத்தில் திளைத்த மக்கள்

Update: 2022-08-21 10:59 GMT

மகுடம் சூடினார் பழங்குடியினர்களின் புதிய மன்னர்... சந்தோஷத்தில் திளைத்த மக்கள்


தென் ஆப்பிரிக்காவில் "Nguni" மொழி பேசும் பழங்குடியினர்களின் புதிய அரசருக்கு முடி சூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது... இந்த பாரம்பரிய விழாவில் ஆயிரக்கணக்கான ஜுலு போர் வீரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்... 48 வயதான "மிசுசுலு கா ஸ்வெலிதினி" ஜுலு ராஜ்ஜியத்தின் அரசராக முடிசூட்டப்பட்டார்... வழக்கப்படி ஏராளமான விலங்குகள் பலியிடப்பட்டு விழா கோலாகலமாகத் துவங்கப்பட்டது... 1879 இசண்டல்வானா போரின் போது பிரிட்டிஷ் படைகளையே விரட்டியடித்த பெருமை இந்த ஜுலு ராச்சியத்திற்கு உண்டு... தங்கள் புது மன்னரை வரவேற்கும் விதமாக மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்