fb பதிவை பார்த்து பச்சிளம் குழந்தையை விற்ற தாய் -"இதுல காணோம்னு போலீசில புகார்"

Update: 2022-12-17 03:56 GMT

கிருஷ்ணகிரியில் பச்சிளம் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரியை அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் தனது 8 மாத குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

முன்னுக்கு பின் முரணாக பேசிய தனலட்சுமி மீது சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, 8 மாத குழந்தையை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த உதயா மற்றும் சுமதி தம்பதியினருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது தெரிய வந்தது.

குழந்தை இல்லாத அந்த தம்பதியர் பேஸ்புக்கில் குழந்தையை தத்தெடுக்க தயார் என பதிவிட்டிருந்ததை கண்ட தனலெட்சுமி அந்த தம்பதியினரை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்து தனது குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து தனலெட்சுமி மற்றும் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்