பிரதமர் தலைமையில் நடக்கப்போகும் கூட்டம் - முதல்வர் ஸ்டாலின், மம்தா புறக்கணிப்பா..?..ஏன்? | PMModi
நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தை புறக்கணிக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்... வரும் 27ம் தேதி நிதி ஆயோக்கின் 8வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயம், பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தக் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலினும் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சார்ந்த பல்வேறு முதல்வர்களும் இந்த கூட்டத்தைப் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.