VAOவை கொலை செய்யும் சில மணி நேரம் முன் காவல் நிலையம் வந்து சென்ற கொலையாளி

Update: 2023-04-29 05:59 GMT

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ்...

இவர் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிலர் மீது போலீசில் புகாரளித்ததால், அலுவலகம் புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

தனக்கு மதிய உணவு அளிக்க வந்த மகனின் கண்முன்னே லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, அதே கிராமத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர்...

இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், ராமசுப்பிரமணியன் மீது மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் ஏற்கெனவே புகாரளித்திருந்தது தெரியவந்துள்ளது...

இதில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படும் நிலையில், இதை விவரித்தும், பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்...

அதில் , கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் விவகாரம் தொடர்பாக ராமசுப்பிரமணியன் மீது ஏற்கெனவே புகாரளித்திருக்கிறார்...

தொடர்ந்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டி வந்த நிலையில், காவல்துறையை தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார் லூர்து பிரான்சிஸ் ..

இந்நிலையில், ராமசுப்பிரமணியின் மீது மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறி காவலர்கள் சிலர் ராமசுப்பிரமணியனை எச்சரித்துள்ளனர்...

இதனால், ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன் அவரது கூட்டாளி மாரிமுத்து என்பவரை அழைத்து சென்று அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இந்த சம்பவத்துக்கு சில மணி நேரம் முன்பு, ராமசுப்பிரமணியன் காவல்துறை வந்து சென்றதாகவும், எனவே, இந்த சம்பவத்தில் காவல்துறைக்கும் தொடர்பிருக்கிறது என கூறும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர், கைது செய்யப்பட்ட இருவரின் செல்போன் அழைப்புகளையும் அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்