குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் சொகுசு கார் மோதி 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த தத்யா படேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அந்த இளைஞரையும் அவரது தந்தையையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாயும் , காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவித்து குஜராத் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.