பிளாட்பார தூணில் சிக்கிய சிறுமியின் தலை.. வெல்டிங் கட்டர் மூலம் தூணை வெட்டி மீட்ட பரபரப்பு காட்சி
ஆந்திராவில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள இரும்பு தூணில் மாட்டிக்கொண்ட சிறுமியை, ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். ரேணிகுண்டா ரயில் நிலையத்தின் 3-வது பிளாட் பாரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சாய் யஸ்வினி என்ற சிறுமியின் தலை, அங்கிருந்த இரும்பு தூணில் மாட்டிக் கொண்டது. இதனை கண்ட பெற்றோர் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள், அந்த தூணின் அடிப்பகுதியை வெட்டி எடுத்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்....