காதலிக்க மறுத்த சிறுமி.. அந்த வார்தையை சொன்ன இளைஞர்- அரசு பள்ளி முன் குவிந்த 100 பேர்

Update: 2023-07-22 06:10 GMT

கும்மிடிப்பூண்டி அருகே, 10ஆம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி, அரசுப் பள்ளி முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

சிறுவாடா கிராமத்தை சேர்ந்த ரகு என்பவரின் மகள் ராகவி, கண்ணன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாதிரிவேடு போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தன்று, பள்ளியில் சிறப்பு வகுப்பில் இருந்த ராகவியிடம், இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி ஆபாசமாக பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதனிடையே, தற்கொலைக்கு காரணமான இளைஞரை கைது செய்ய கோரி, சிறுவாடா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், அரசு பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாதிரிவேடு போலீசார், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்