கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திடீரென உருவான பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளத. ஐயப்பன் குத்து எனும் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் திடீரென ஒரு பள்ளம் உருவானது. சுமார் ஐந்து மீட்டர் அகலமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த பள்ளம் தானாக உருவானதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான காரணம் தெரியாததால், குழப்பத்தை தீர்க்க மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.