சேலத்தில் காவலர்கள் எனக் கூறி, இளைஞரிடம் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன்.
கல்லூரி மாணவரான இவருக்கு, காவலர் எனக் கூறி தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது.
இதனை நம்பி சென்ற கல்லூரி மாணவரை, 5 பேர் கொண்ட கும்பல் மிரட்டி, செல்போன் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையாக, 10 ஆயிரம் ரூபாயை திருடி உள்ளனர்.
இதனிடையே, கல்லூரி மாணவர் அளித்த புகாரின்பேரில் 5 பேர் கொண்ட கும்பலை, அன்னாதானப்பட்டி காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.