கள்ளழகர் கோயிலுக்கு சாலை போடும் போதே தடுத்து நிறுத்திய வனத்துறையினர்.. அதிகாரிகளை வைத்து பூட்டியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கோயில் நிர்வாகத்தினர் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளழகர் கோயிலில் இருந்து மலை மீது அமைந்துள்ள பழமுதிர்சோலை மற்றும் ராக்காயி அம்மன் கோயிலுக்கு செல்ல, 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பிக்கும் பணி துவங்கியது. ஆனால் மலைப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறி, திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் அந்த பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கோயில் நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பணிகள் தடைபட்டது. இதனிடையே, சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினரை, வெளியேற விடாமல் கோவில் நிர்வாகத்தினர் நுழைவாயிலில் பூட்டி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....