பிரபல கட்சி பிரமுகருக்கு 'பளார்' விட்ட பெண் இன்ஸ்பெக்டர்..! வெளியான அதிரடி வீடியோ..!

Update: 2023-07-13 02:13 GMT

ஆந்திராவில் காவல் நிலைய வளாகத்தில் அரசியல் கட்சி பிரமுகரை பெண் காவல் ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி, மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே வார்த்தை போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பவன் கல்யாணை ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து, காளஹஸ்தியில் ஜனசேனா கட்சியினர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஜனசேனா கட்சியினரை, போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்தும் அவர்கள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக முழக்கம் போட்டனர். இதனால் ஆவேசம் அடைந்த காவல் ஆய்வாளர் அஞ்சு யாதவ், திடீரென்று ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தலைவர் சாய் என்பவரை பிடித்து கன்னத்தில் பளார் என அடித்தார். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக காவல் ஆய்வாளர் அஞ்சு யாதவ் இது போல் செயல்படுவதாக ஜனசேனா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்