தண்ணீர் இல்லாமல் தவித்த குடும்பம்.. 34 அடியில் கிணறு தோண்டிய சிறுவர்கள் - ஊரையே மலைக்க வைத்த அக்கா, தம்பி

Update: 2023-07-14 02:46 GMT

கேரள மாநிலம், பாலக்காட்டில் சிறுவர்களாகிய அக்கா, தம்பியின் முயற்சியால் ஒரு குடும்பத்தினர் உழைப்பை செலுத்தி கிணறை உருவாக்கி உள்ளனர்.


பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மண்ணார்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் என்பவரின் வீட்டில், 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சமீபகாலமாக போதிய தண்ணீர் வருவதில்லை. இதனால், என்ன செய்வது என்று பாபுராஜ் குடும்பத்தினர் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய பிள்ளைகளான சிவன்யா, சிவஜித் ஆகிய இருரும் கிணறு தோண்ட முடிவு செய்து, களமிறங்கினர். சிறுவர்கள் இருவரும் மேற்கொண்ட கடின உழைப்பால் 34 அடி ஆழத்தில் கிணறு உருவாகி உள்ளது. இதனால் அந்த குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்