34 ஆயிரம் பேரை கொன்றும் அடங்கா பூகம்பம்.. மீண்டும் துருக்கியை உலுக்கிய கொடூரம்- பதைபதைப்பு காட்சிகள்
துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிந்து விழுந்த கட்டடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளை அகற்ற, அகற்ற இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் ஒருசிலர் மீட்கப்படுவதால், மீட்புப் படையினர் மன உறுதியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், கட்டடங்கள் தரைமட்டமாகி 7 நாட்கள் ஆகிவிட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதுவரை துருக்கியில் மட்டும் 29 ஆயிரத்து 605 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சிரியாவில் 4 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில், உயிரிழப்பு 50 ஆயிரத்தை தாண்டும் என ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.