காதல் திருமணம் செய்த மகள்.. பிரித்து வைக்க பெற்றோர் விபரீத முடிவு - பேச பேச கதறிய சோகம்

Update: 2023-07-23 07:58 GMT

பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த ஓட்டுநர் விஜயபாஸ்கர் என்பவரும், திருவதிகையை சேர்ந்த பெண்ணும் அண்மையில் காதல் திருமணம் செய்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்ணை பிரித்து வைக்கக் கோரி போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதன்பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காதலித்த கணவருடன் மகள் சென்றதால் பெற்றோர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு சாலையில் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்