மனைவியின் கள்ளக்காதலன் மகளுடன் காதல்..மகள்களுடன் இணைந்து கணவனை எரித்து கொடூரம்.

Update: 2022-10-17 07:42 GMT

மனைவியின் கள்ளக்காதலன் மகளுடன் காதல்.. மகள்களுடன் இணைந்து கணவனை எரித்து கொடூரம் - பதறவைக்கும் த்ரில் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன், மனைவி மற்றும் மகள்கள் சேர்ந்து கொலை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி அருகே அச்சங்குளம் கிராமம் அருகே, பாதி எரிந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை, போலீசார் மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணைக்குப் பிறகு, தீ வைத்து எரிக்கப்பட்ட நபர், காமநாயக்கன்பட்டி அருகே குருவிநத்தம் தெற்கு தெருவை சேர்ந்த ஞானசேகர் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ஞானசேகரின் மனைவி சலைத்ராணி மற்றும் பள்ளியில் படிக்கும் அவரது 2 மகள்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காமநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்கிற கார்த்திக்கிற்கும், சலைத் ராணிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், சலைத் ராணியின் மூத்த மகளையும் கார்த்திக் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஞானசேகர் மனைவி மற்றும் மகளை கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஞானசேகரை தீர்த்துக் கட்ட நினைத்த சலைத் ராணி, தனது இரு மகள்கள் மற்றும் கள்ளக்காதலுடன் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்