அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க, சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும், தண்டனைக்கும் இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராபின் பி மொகேரா கடந்த 13-ஆம் தேதி விசாரித்தார்.
அப்போது, விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்று ராகுல் காந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ். சீமா தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் அவதூறு பேச்சால், மோடி என பெயர்கொண்ட அனைவரும் புண்பட்டுள்ளதாக மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பு இன்றைய தினத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது
The court refused..Is there a prison sentence? Isn't it?அதன்படி, இன்று தீர்ப்பளித்த சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தது.