பல்வேறு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில், பெரம்பலூர் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகள், கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்களுடன், காலை, மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விலங்கியல் தொடர்பான பாடத்தை நடத்தியதோடு, அவர்களின் சந்தேகங்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் பதில் அளித்தார். இதனை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தனர்.