எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்..இன்று பெங்களூரு விரைகிறார் முதல்வர்

Update: 2023-07-17 04:16 GMT

எதிர்கட்சிகளின் 2-ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று பெங்களூர் செல்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இதற்காக, எதிர்க்கட்சிகள் நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம், பீகார் மாநிலம், பாட்னாவில் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அந்த கூடத்தில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2-ஆவது கூட்டம், பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை பெங்களூர் செல்கிறார். அவருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் செல்கிறார். இரண்டு நாள் கூட்டத்தை முடித்து விட்டு, சென்னை திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்